சோமாலியா கடற்பரப்பில் இலங்கை இலங்கை கொடியுடன் கடத்தப்பட்ட கப்பல் இலங்கைக்கு சொந்தமானதல்ல என இல்லை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏரிஸ் 13 என்ற கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் நேற்றைய தினம் கடத்தியிருக்கலாம் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கப்பல் இலங்கைக்கு உரிய கப்பல் இல்லை எனவும், ஆனால் அதில் பணிபுரியும் 8 ஊழியர்களும் இலங்கையர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார்.

மேலும், கடத்தப்பட்ட கப்பல் டுபாய் நாட்டுக்கு சொந்தமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements