kong-skull-island-2017-casting

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் குட்மேன். பசுபிக் பெருங்கடலில் அவர் நடத்திய ஆராய்ச்சியின் போது மறைவாக உள்ள ஸ்கல் ஐலேண்ட் என்ற தீவு ஒன்றை கண்டுபிடிக்கிறார். யாரும் நுழைய முடியாத அளவுக்கு அந்த தீவில் ஒருவித சூறாவளி போன்ற சுழற்காற்று ஒன்று தடுக்கிறது.

எனவே அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டால் பல புதுமையான கனிமங்கள் மற்றும் படிமங்கள் கிடைக்கும் என்று நம்பும் விஞ்ஞானி குட்மேன் அந்த தகவலை தனக்கு நம்பமகமான முன்னாள் ராணுவ வீரர், படத்தின் ஹீரோவான டாம் ஹிடில்சனிடமும், பெண் புகைப்பட கலைஞர் ஒருவரிடமும் தெரிவிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமெரிக்க அரசிடம் இருந்து அனுமதி பெற்று அந்த தீவுக்கு தனது விஞ்ஞானிகள் குழுவுடன் செல்கிறார். அந்த விஞ்ஞானிகள் குழுவுடன், அமெரிக்க ராணுவக்குழு ஒன்றும், மருத்துவக்குழு ஒன்றும் செல்கிறது.

அந்த தீவுக்கு செல்லும் இராணுவ குழுவை சாமுவேல் ஜேக்சன் வழிநடத்தி செல்கிறார். மூன்று குழுக்களும் அந்த தீவினை நெருங்கும் போது சுழற்காற்று வீசுத் தொடங்குவதால் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுக்குள் நுழைகின்றனர்.

தீவுக்குள் நுழையும் போதே ஒருவித புதுமையை உணரும் அந்த குழுவினர் அங்கு தரையிறங்கும் முன்பு பாறைப்படுகையை கண்டறிய குண்டுமழை பொழிகின்றனர். அப்போது எதிர்பாரதவிதமாக வரும் கிங்காங் மீதும் அக்குழு தாக்குதல் நடத்துகிறது.

அதனை கண்டு மிரண்ட கிங்காங் தன்னை தாக்கும் ஹெலிகாப்டர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்கிறது. இதில் ராணுவ குழுவில் உள்ள பெரும்பாலானோர் பலியாகின்றனர். உயிர்தப்பும் மற்ற குழுவினர் கிங்காங்கிடமிருந்து தப்பிக்க காட்டுக்குள் செல்கின்றனர்.

அதே நேரத்தில் அந்த காட்டுக்குள் வசிக்கும் காட்டுவாசி குழு மற்றும் இதற்கு முன்பு ஆராய்ச்சி செய்ய வந்து அந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்ட விஞ்ஞானி ஒருவரையும் உயிர்தப்பியவர்களில் சிலர் சந்திக்கின்றனர். அங்கு பல ராட்சத விலங்குகளை பார்க்கும் ஆராய்ச்சி குழுவினர் ஒருவித பெரிய பல்லி போன்ற விலங்கிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? அவர்களை கிங்காங் எப்படி காப்பாற்றியது. ஏன் காப்பாற்றியது ? ஏன் காப்பாற்றியது என்பது படத்தின் மீதி கதை.

படத்தில் டாம் ஹிடில்சன், ஜான் குட்மேன், சாமுவேல் ஜாக்சன், பிரெய் லார்சென், ஜேசன் மிட்செல், ஜான் ஆர்டிஸ், கோரி ஹாக்கின்ஸ், தாமஸ் மேன் உள்ளிட்ட அனைவரும் தங்களது நடிப்பை சிறப்பாக தந்துள்ளனர். குறிப்பாக ஜான் ரெய்லி வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. சரியான நேரத்தில் அவரது காமெடியும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

படத்தில் டப்பிங் கலைஞர்கள் தமிழுக்கு ஏற்றவாறு அழகாக, நேர்த்தியாக குரல்களை கொடுத்துள்ளதால் தமிழில் படம் பட்டயை கிளப்புகிறது என்று சொல்லலாம். குறிப்பாக படத்தை 3டி-யில் பார்க்க ரம்மியமாக உள்ளது.

படத்தின் இயக்குநரான ஜோர்டன் ரோபர்ட்ஸ் காட்சிகளை நேர்த்தியாக வடிமைத்துள்ளார். குறிப்பாக கிங்காங் வரும் காட்சிகளும் சரி, ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்களை திரையில் பார்க்க ரம்மியமாக உள்ளது. படத்தின் கதையை பொறுத்தவரை அமெரிக்க தனது ஆயுதங்களை பொதுவான இடத்தை தேர்வு செய்து அதில் சோதனை செய்து பார்க்கும்.

அதாவது வியட்நாம் போர் என்பது நாம் அறிந்ததே. முன்பு ஒருமுறை தனது ஆயுத பலங்களை வியட்நாமின் மீது சோதித்து பார்த்தது. அந்த நேரத்தில் வியட்நாமில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அந்த போரில் அமெரிக்க படை தோல்வியையே சந்தித்தது.

அமெரிக்க படைகளை விரட்ட வியட்நாம் படை கொரில்லா படைபெயடுப்பை நடத்தியது. அந்த கதையை மையக் கருத்தாகக் கொண்டு இந்த கதை உருவாகியுள்ளது என்றும் பார்க்கலாம்.

படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகளை பொறுத்தவரை தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். குறிப்பாக காடுகள் மற்றும் அதன் தோற்றம் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. மேலும் கிங்காங் வரும் காட்சிகளும் சரி, ராட்ச பல்லி உள்ளி காட்டு மிருகங்கள் வரும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது. பிரம்மிக்க வைக்கிறது.

Advertisements