அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல் காரணமாக மக்கள் அனைவரையும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த பனிப்புயல் காரணமாக தற்போது 7 ஆயிரத்து 600 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.வடகிழக்கு பருவ மழை காரணமாக தற்போது அமெரிக்காவில் மணிக்கு ஐம்பது முதல் அறுபது கிலோமீற்றர் வேகத்தில் பனிப்புயல் உருவாகியுள்ளது.இதன் காரணமாக கிழக்கு பகுதியில் பனிப்புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலை தற்போது நீடிப்பதன் காரணமாக 31 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisements