போர் குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதில் இலங்கை அரசு தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயித் ராத் அல் ஹுசைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின் போது மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சர்வதேச விசாரணை கோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் முறையிடப்பட்டது.

அதையடுத்து, இலங்கை அரசே விசாரணைக் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு ஐ.நா அறிவுறுத்தியது.

இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை ஆணைய அமர்வின் கூட்டத்தில் ஆணைய தலைவர் செயித் ராத் அல் ஹுசைன் உரையாற்றினார்.

Advertisements