baahubali_rajini_25317_m

இந்தியாவின் மிக பிரமாண்டமான படமான ‘பாகுபலி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் நடைபெறவுள்ளது

இந்த இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வருகிறது.

‘பாகுபலி 2’ இசை விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்வது இன்றுவரை உறுதி செய்யப்படவில்லை எனினும் இருவரையும் விழாவிற்கு அழைக்க ‘பாகுபலி 2’ குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும், எஸ்.எஸ்.ராஜமெளலி மீது இருவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளதால் இந்த விழாவில் கலந்து கொள்ள இருவரும் ஒப்புக்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements