இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்திற்கான கொள்கை மற்றும் சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில்இ பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்தை வரையுமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்ப மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இதனை  குறிப்பிட்டார்.
ஏப்ரல் 4ஆம் திகதி அமைச்சரவை கூடியது. அதன் போது எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, பாதுகாப்பு அமைச்சரின் மேற்பார்வை, ஏனைய அமைச்சர்களின் கருத்துக்கள் போன்றவற்றின் அடிப்படையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டம் திருத்தப்பட்டது. இதற்கமைய, கொள்கை மற்றும் சட்டவரைபை பிரதமர் சமர்ப்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்ததென அமைச்சவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான புதிய சட்டத்தின் மூலம் இலங்கையின் பயங்கரவாதச் சட்டம் இல்லாமல் போவதாகக் கூறினார்.
Advertisements