ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரஜினிகாந்தின் ‘2.0’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய இரண்டு படங்களுக்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்து முந்தைய காலங்களில் வருடத்துக்கு இரண்டு, மூன்று படங்கள் திரைக்கு வந்தன. அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை வருடத்துக்கு ஒரு படம், இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று குறைந்து விட்டது. அதிக பொருட்செலவுகள், உலகத்தரத்தில் தொழில் நுட்பங்களை புகுத்துதல், வெளிநாடுகளில் படப்பிடிப்புகளை நடத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன.

ரஜினிகாந்த் நடித்து 2010-ம் ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் ஷங்கர் அப்போதே திட்டமிட்டார். அதற்கான திரைக்கதையையும் உருவாக்கினார். ஆனால் படப்பிடிப்பு உடனடியாக தொடங்காததால், இடையில் ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்திலும், ‘லிங்கா’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்தார். 2014-ம் ஆண்டு இந்த படங்கள் திரைக்கு வந்தன.

Advertisements