கோகோ கோலாவிற்கு ஆதரவாக கடந்த 2013 ஆண்டு ராதிகா நடித்த விளம்பரமொன்று தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர், நடிகைகளை வைத்து பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவது வாடிக்கையாகும்.

 

நடிகர் விஜய், விக்ரம் போன்றவர்களும் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்துள்ளனர். விஜய் கோகோ கோலாவிற்காக ஏராளமான விளம்பரபடங்களில் நடித்து இருந்தார்.

பெப்சி, கோக் போன்றவற்றில் இரசாயன பொருள்கள் கலக்கப்படுவதாக தகவல் வெளியான போது இதன் விளம்பர படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோர் ஆகியோர் சர்ச்சையில் சிக்கினர்.

கத்தி படத்தில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் உள்நாட்டு நீராதரத்தினை சீரழிப்பதை தடுப்பதை போன்று நடிகர் விஜய் நடித்ததை தொடர்ந்து இனி கோகோ கோலா விளம்பரம் போன்றவற்றில் நடிப்பதில்லை என உறுதியளித்தார்.

இந்நிலையில் கோகோ கோலாவிற்கு ஆதரவு அளிப்பது போன்ற நடிகை ராதிகாவின் விளம்பரமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

2013 ஆண்டு நடித்த விளம்பரம் என்ற போதிலும் ராதிகாவிற்கு எதிரான மனநிலையினை உருவாக்க சிலர் தற்போது இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Advertisements