(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பிள்ளைகளை போல வீதியோரம் தொழில் உரிமைக்காக போராடும் வேலையற்ற பட்டதாரிகளையும் பார்க்க வேண்டும்)

மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளையும் சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு தீர்க்கமான கருத்தினை கூட வழங்கவில்லை என்பது ஒரு எண்ணப்பாடாக இருக்கிறது.

எல்லா அரசியல்வாதிகளும் கூறியது போல எமது ஜனாதிபதியின் பேச்சும் நீர் மேல் எழுதியது போல் அல்லாமல், கல் மேல் எழுதியது போல அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்.

இருப்பினும் இன்னும் ஒரு மாதத்திற்குள் எங்களது பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தருவதாக கூறியுள்ளமை மகிழச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் எங்களுக்கான தொழில் வாய்ப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements