ரஜினி தன்னுடைய ரசிகர்களை இன்று (மே 15) கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுக்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது ரஜினி, கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை சிலர் பயன்படுத்துகின்றனர்.

அமைச்சர் போன்ற சில பதவிகளை ஏற்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நான் பதவிகளை கொண்டு பணம் சம்பாதிக்க மாட்டேன். சூழ்நிலை காரணமாக நான் அரசியலுக்கு வந்தாலும் பணத்துக்காக சேரும் கூட்டத்தை சேர்த்து கொள்ளமாட்டேன் என்று பேசியுள்ளார்.

Advertisements