பின் தங்கிய மாநிலமான பீகாரில் மதுக்கடைகளை ஒழிக்கும் போது தமிழ்நாட்டில் ஏன் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கூடாது என 7 வயது சிறுவன் கேள்வியெழுப்பியுள்ளான்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படூரை சேர்ந்தவர் ஆகாஷ் (7), தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆகாஷ் கடந்த மாதம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினான்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த ஆகாஷ் படூரில் திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.

அங்குள்ள கல்லூரி மாணவர்கள் மது அருந்திவிட்டு அந்த வழியாக போகும் பெண்களின் கழுத்தில் உள்ள செயினை அறுப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த கடையை மூட தான் போராட்டம் நடத்த போவதாக ஆகாஷ் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடன் 200 சிறுவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறியுள்ள ஆகாஷ் தமிழகத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வருபவர்கள் வீட்டிலுள்ளவர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் பீகார் போன்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலத்தின் முதல்வர் நிதீஸ்குமார் மதுவிலக்கு கொண்டு வரும் போது, செழிப்பாக இருக்கும் தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என் மதுக்கடைகளை மூட மறுக்கிறார் என ஆகாஷ் கேள்வி எழுப்பியுள்ளான்.

Advertisements