`பாகுபலி’ வெளியாகி, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. படத்தின் ஒட்டுமொத்த லைனே ‘Why Kattappa Killed Baahubali?’ என்பதாக மாறிவிட்டது. #WKKB என்ற ஹேஷ்டேக் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டும் அளவுக்கு இரண்டாம் பாகத்துக்கான செல்லிங் பாயின்டாக மாறியிருக்கிறது. ‘பாகுபலி 2’ நாளை வெளியாகிறது என்ற பரபரப்புக்கிடையே முதல் பாகத்தைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்துபார்க்கலாமா?

குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வந்திவிடப்போகிறது என்ற அச்சத்தில், சங்கா (ரோகினி) அந்தக் குகைப்பாதையை அடைக்கச் சொல்வார். குழந்தைக்கு `சிவுடு’ எனப் பெயரிட்டு வளர்க்கவும் செய்வார்.

சிவுடுவுக்கு, அருவிக்கு மேல் என்னதான் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம். அடிக்கடி அங்கு செல்ல முயற்சிக்கும் சிவுடுவுக்கு, ஒரு முகமுடி கிடைக்கிறது. இந்த முறை அவன் அருவிக்கு மேலே செல்ல முயற்சிக்கும்போது மர்மப் பெண் ஒருத்தியைப் பார்க்கிறான். அவளைப் பின்தொடர்ந்து செல்லச் செல்ல, முடிவில் அருவியின் உச்சிக்கே செல்கிறான்.

Advertisements